இலவசமாய் வாய்க்கரிசி

பவர் கட்டு.........பவர் கட்டு........
பாழாப் போன மின் திருட்டு.....!!!

சேமிக்க தெரியாம....சீரழிஞ்சி போயாச்சி....
சீக்குப் புடிச்ச மேனியாட்டம்......
சிறந்த மின்சார வாரியம் ஆயாச்சி ......!

தெருவோர டியூப் லைட்டு
தெண்டத்துக்கு ஏன் நிக்குது.....?

பல்லால அத கடிச்சு இனி
பசிக்கு நாம சாப்பிடுவோம்........

மழையும் இனி வராது
மரத்த நாம வெட்டியாச்சி......

பஞ்சப் பரதேசிபோல
படுக்கையிலே விழுந்தாச்சி........!

விலைவாசி இனி கொள்ளிபோடும்....
விருட்டென நாம எரிஞ்சிடலாம்.......

விளக்கு எரியுதே என நினைத்து - அதில்
தீக் காய்வர் " குளிர்கால கூட்டத் தொடரில்..."...!

வாக்காளப் பெருமக்களே.........இலவசமாய்
வாங்கிக் கொள்ளுங்கள் உங்கள் வாய்க்கரிசி...!

எழுதியவர் : (27-Sep-12, 12:02 am)
பார்வை : 146

மேலே