உடல் உறுப்பு தானம்

இப்பூமியில் பிறப்பு இறப்பு புதிதல்ல
இது வினாடிக்கு அரங்கேறும் ஓர் கணக்கே !

அதிலும், பிறந்தோம் படித்தோம் பணம் பார்த்தோம்
இணைசேர்ந்தோம் ஈன்றோம் இறந்தோம்
என்பதே மனித ஜாதியின் இயல்பு...

உண்மையில் ஊனம், என கூற என் நா கூச - இச்சொல்லை,உச்சரிக்கும் கணமாவது உன் உள்ளத்தின் ஊனத்தை நீ உணரவில்லையா...

பிறப்பிலேயே பல மாற்றுதிறனாளி ,
பிறந்த பின்பும் அவன் தான் மாற்று - திறனாளி...

வண்ணம் கண்டு வானவில் ரசித்து வாழ்நாளில்
வாகை சூடியவன் இறுதியில் மாலை சூடுவான்,
அவ்வுடலோ இருநாள் குளிரும் பின்னால் வெளியேறும் பாடையில் பாதையாதிரையாய்...

இடுகாட்டில் புழுக்களுக்கு புத்துடல் வருகை கொண்டாட்டம்,
இங்கோ பச்சிளம் சிசு பார்வையில்லா திண்டாட்டம் !

இறந்தவனின் மூளை ஐந்து நிமிடம் இயங்குமாம்,
இவனுக்கோ ஐம்பது வருடமாக இயங்கவில்லையே - ஐய ஒ !!!

சீன சிறுவன் சிறுநீரகத்தை செலவழித்தான்- அழிந்தான் -ஆப்பில்
செல்பேசிக்காக இரண்டாயிரம் யுவான்களுக்கு,
அதில் மருத்துவனின் வியாபாரமோ அபாரம் இருபதாயிரம் யுவான்கள்- கொடுமை !!!

விபத்தின் விதியால் பல்லாயிரம் இழப்பு - விளைவு
இது தான் சில உயிர்களுக்கோ செழிப்பு.
இன்னுமா விளங்கவில்லை ---- இது தான்
உடல் உறுப்பு தானம் !

உடல் உறுப்பு தானம் உன் சித்தம் இங்கு சட்டமிட்டாலும் தண்டம் !
ஆம், சுயநல மனங்கள் சாம்பலாகட்டும் - அவ்வுடல்,
இப்பூவுலகில் மலர்ந்ததே பாவம் அது, மண்புழு அரித்து மக்கட்டும் ....

"உடல் உறுப்பை தானம் செய்"

எழுதியவர் : ராம் பிரவீன் (27-Sep-12, 10:24 pm)
பார்வை : 2434

மேலே