இன்னும் நினைக்க ஆசை
இன்னும் நினைக்க ஆசை
சிறு வயதில் புத்தகத்தில் வைத்த
மயில் இறகு குட்டி போடவில்லை என்று
அழுத ஞாபகம் -இன்னும் நினைக்க ஆசை
பள்ளி செல்லும் போது
பூ வைக்க வேண்டும் என்று
அடம்பிடித்த ஞாபகம் -இன்னும் நினைக்க ஆசை
தம்பி புத்தகத்தை கிழித்தவுடன்
அம்மா அடித்த ஞாபகம் -இன்னும் நினைக்க ஆசை
அப்பா அம்மாவை அடித்தவுடன்
நானும் அழுத ஞாபகம் -இன்னும் நினைக்க ஆசை
நான் நாடக மேடையில்
நன்றாக நடித்தேன் என்று
ஆசிரியர் பாராட்டிய ஞாபகம் -இன்னும் நினைக்க ஆசை
எதிர்காலத்தில் நானும் ஆசிரியராவேன்
என்று கூறிய ஞாபகம் -இன்னும் நினைக்க ஆசை