வாழட்டும் பெரியவாள் வளரட்டும் தோழர்காள்... .

விடியலின்

துவக்க உமிழ்வே சிவப்பு...

உலகளாவிய மனித.....

இல்லை ..இல்லை ..

தோழமை நிறம்..!!



என்னுடையதெல்லாம் எனது

உனதெல்லாமும் எனது

-இந்த மமதை கொள்கையை

உடைத்திட வந்தததுதான்

சுத்தியலும் அரிவாளும்....

காற்றில் கழுகுக்குக் கிடைத்த

சமநிலை கூட

மனிதருக்கு எட்டாக்கனி என்ற

சகதி நிலை மாற்றியது

இந்த விடியல்.. ..



விடியலின் வெப்பத்தில்

துடித்துப் பொசுங்கியது

ஏற்றத்தாழ்வுகள் எனும்

உறை பனிக்கட்டிகள் ....



தனியுடைமை பாத்திகளின்

பணப் பயிருக்கு

தங்கள் வாழ்வைத்தொலைத்த

தலைவிதிகளின் அவல வாழ்வுக்கு

சுகவழி வாழ்விற்கு

ஒளியானது விடியல் ......



விடியலில் விரிந்த

கதிர்கள் எல்லாமே மனிதருக்கானவையே...

மானுட தோழமைக்கானதே...



விடியல் இன்னமும் ..

நித்தமும் பூமிப்பரப்பில்...

கதிர்களில் ஒளி வேற்றுமை

காண்போர் கண்களில் காமாலை...!!!

காமாலை கண்களைத்தாக்கும்
பாமாலை மனதிற்கு சுகமளிக்கும்
சுகம் ஏற்போம்...சுமை நீக்குவோம்...
சுவை சேர்ப்போம்...இமை விரிப்போம்

தோழா என்பவர்
அப்படியே விளித்திடுக..
வேண்டாம் என்போர்
அதனை உள்ளத்துள் மறுத்து
உவகைக்கு ஏற்ப
நண்பரே ,பெரியீர் ,பேரன்புடையீர் .
பெருமகனே , கோமகனே ,
பெருந்தகையீர் ,.......
எனக் கொள்க...
எழுத்தில் இன்புருக .....

சரித்திரப் பிழை
சந்தியில் ஜனனம்...
கால மருத்துவச்சி இனி
பார்க்கட்டும் மருத்துவம்...

அன்புடன் அகன் ......பெரியவாளுக்கெல்லாம்
தோழமையுடன் .....தோழர்களுக்கெல்லாம்....
வாழட்டும் பெரியவாள்
வளரட்டும் தோழர்காள்...
.
(இத்துடன் விட்டு விட்டேன் அபி ,நிலா ,கலை ருத்ரா ,)


அன்புடன் அகன்

எழுதியவர் : agan (28-Sep-12, 12:10 am)
பார்வை : 158

மேலே