பிரிந்த பின்னும்...

உன்னை நினைப்பதில்லையென
மனத்திடம் சொல்லி வைத்தேன்
உன்னை காண்பதில்லையென
கண்களுக்கும் கட்டளையிட்டேன்
உன் பெயரை உரைப்பதில்லையென
வாய்க்கும் பூட்டு போட்டேன்
உன் உணர்வுகளே வேண்டாமென்று
நானே என்னை மதுவுக்கும் விற்றுவிட்டேன்
ஆனாலும் தோற்றது நானே!
கண்ணில் பதிந்த உன் விம்பங்கள்
காதில் ஒலிக்கும் உன் சலங்கை ஒலி
என்னை தொட்டுச் சென்ற உன் வருடல்கள்
கூட்டுச்சேர்ந்து என்னைக்கொல்லுதே,
நீ என்னை விட்டுப்பிரிந்து சென்றபோதும்...

எழுதியவர் : S.Raguvaran (29-Sep-12, 9:43 pm)
Tanglish : pirintha pinnum
பார்வை : 265

மேலே