மாற்றம்
கனவாய் கூட நினைத்ததில்லை
.என்மனமும் இப்படி குதுகலிக்கும் என்று
.கடந்து விட்ட காலத்தில்தான்
எத்தனை வலிகள் , எத்தனை ரணங்கள் ,
எத்தனை தடைகள் எத்தனை கண்ணீர் துளிகள் ?
அவையனைத்தும் இந்த ஒரு பரிமாணத்திற்கு தானா?
என் வாழ் நாள் சிறக்க எனக்கே -இல்லாத
கரிசனமாய் உறவுகள்.
நண்பர்களின் உருக்கமான -அகப்பிரார்தனைகள்
என் முகம் மலர .
உவகையுடன் என் பரிணாம வளர்ச்சியே
மெய்மறந்து ரசித்து
மனமுவந்து பாராட்டும் சுற்றம்
சேவைக்காய் வேதனம் - அதிலும்
சீதனமாய் எண்ணிலடங்கா ஆத்ம திருப்தி
பிறர் களிப்பில் என் துன்பம் துறக்கும் இன்பம்.
உறைந்து போய் இருந்த - உணர்வும்
மெல்ல மெல்ல இதமாய் கசிகிறதே
இருகரம் நீட்டி அன்பாய்
அழைக்கிறதே வாழ்க்கை
அமர்க்களமாய் ஆரவாரம் செய்கிறது - எண்ணங்களும் சீர்மையான
வாழ்நாளை நோக்கி
பழைய
என் மனம் புதிதாய் பிறப்பெடுத்து விட்டதா?
பல முறை கேட்டு கொள்கிறேன்- இது
நான் தானா என்று?