புரிதல்ககள் வேண்டுமடா...!!

நேரத்துக்கு எழும்பணும்
கட முதலாளி சொல்லிருக்கார்.
விடிய முதலே
விறகு வெட்டணும்,
நிற்கமுன்னமே
தண்ணி நிரப்பணும்,
பாத்திரம் கழுவணும்
சமையலுக்கு உதவணும்
நேற்றைய விட இண்டைக்கு
சுடசுட ரொட்டி கூடவே இருக்கணும்.
ஏண்டா நாளைக்கு என்னடா தம்பி?
பக்கத்தில் படுத்திருந்த
முதியவர் முனகியபடி கேட்டார்.
தெரியாதா தாத்தா?
ஏதோ பிள்ளைங்க நாளாம்,
உங்கட நாளாம்!
பேரணி இருக்காம்
கடைக்கார அண்ணாச்சி
வெள்ளனவே வரச்சொன்னார்...