என்னவள்...
*காற்று கூட
விளையாட ஆசைப்படும்
என்னவளின் கருநிற கூந்தலில்...
*பிரம்மனும் குழம்பியிருப்பான்
என்ன எழுதுவதென்று
என்னவளின் நெற்றியில்...
*வானவில்லும் தயங்கி
வளைந்து செல்கிறது
என்னவளின் புருவ அமைப்பில்...
*நீரில்லாமல் வாழும்
அதிசய இருமீன்கள்
என்னவளின் கண்கள்...
*வர்ணித்து எழுத
வார்த்தைகள் இல்லை
என்னவளின் நாசி அழகை...
*பறவைகளும் ஏங்கி
கடிக்க தவமிருக்கும்
என்னவளின் கன்னத்தை...
*ரசிக்கத் தூண்டும்
அரஞ்சு சுளைகள்
என்னவளின் உதடு...
*முத்துக்களும் பாலும்
பொறாமைக்கு ஆளாகியது
என்னவளின் பளிச் பல்லில்...
*நூலிலும் மெல்லிய
அதிசய சந்தனக்கொம்பு
என்னவளின் அழகிய உடலமைப்பு ...
*கடவுளும் மனிதனாக
பிறக்க ஆசைபடுகிறான்
என்னவளின் கருவாக ஜெனிக்க...
*மயிலும் மயங்கி
நிற்கும் என்னவளின்
ஒய்யார நடை அழகில்...
*குயிலும் கூனிக்குறுகி
நிற்கும் என்னவளின்
இனிய குரல் அழகில்...
*மண் தான் என்ன
தவம் செய்ததோ
என்னவள் பாதம் பட...
*நாம் காணும்
ஜான்சி ராணியாக
என்னவள் வீரத்தில்...
*பெரியார் இருந்திருந்தால்
பெருமை கொள்வார்-ஆம்
என்னவள் சிக்கனத்தின் சிகரம்...
*அறிஞர்கள் யாரிடனும்
ஒப்பிட முடியவில்லை
என்னவளின் அறிவுத்திறனை...
அன்பின் இலக்கணம்
அறிவின் ஆலயம்
சிக்கனத்தின் சிகரம்
அழகின் சொரூபம்
இதன் முகவரி என்னவள்....