விதி விளையாட பொம்மையான உயிர்கள்

மணி அடித்து
குடும்பத்திடம் விடைபெற
தலைவன் முனைகையிலே

துள்ளி குதித்து வாசலுக்கு
ஓடி வந்தது வாண்டு ஒன்று
அப்பா என்றபடி

அப்பா நானும் வரேன் நானும் வரேன்
அப்பா நானுப்பா என்றது ஆசையோடு
நாளைக்கு தம்பி என்றதும்
வாடியது குழந்தை முகம்

அந்நேரம் தலைவியும் வந்து நிற்க
தாய் முகத்தை பார்த்தது குழந்தை
இன்று அப்பா போய் வரட்டும் தம்பி

நாளை நிச்சயம் உன்னை அழைத்து செல்வார்
என்றாள் குழந்தையை இடுப்பில்
தூக்கி இருத்தியவாறு

ஒரு வழியாக இளவரசன் விடையளிக்க
சிறு புன்னகையோடு
அப்பா சைக்கிளை உந்தினார்
பட்டாசு தொழிற்சாலைக்கு
வழக்கம் போல

நேரம் போனது அம்மாவும் பிள்ளையும்
ஆலயம் சென்ற போது
மனம் உருகி வேண்டினாள் அம்மனிடம்
தான் காலம் எல்லாம்
திர்க்க சுமங்கலியாக திகழ்ந்திட
அம்பாளுக்கென்ன அவள் என்றும் போல அலங்காரத்தோடு கட்சி தந்தாள்

வீடு திரும்பிய தலைவி
சமைக்க தொடங்கிய போது
வாண்டு தொலைகாட்சி பெட்டிக்கு
உயிர் கொடுத்தான் இயக்கி வழியாக

முக்கிய செய்தி
இன்று காலை பதினோரு மணியளவில்
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

முப்பதுக்கும் மேற்ப்பட்டோர் உயிர் இழந்தனர்
பலர் படு காயங்களோடு மருத்துவமையில் சேர்ப்பு என்றார் செய்தி வாசிப்பாளர்

பதறியடித்து
கணவனை தேடி ஓடினாள் தலைவி
இரண்டு நாள் கழிந்த பின் கிடைத்தது
கணவனின் உயிர் சுமந்தத கூடு

கருகிய உடலை
விறகுக்குள் புகுத்தினர்
சம்பரதாய சடங்குகள்
என்னும் பெயரால்

விடிந்ததும்
இன்னிக்கி அப்பா கூட
நான் சைக்கிள்ள போவேன்
என்று அடம் பிடித்து
அப்பா எங்கே என்று தேடும்
குழந்தைக்கு

கண்ணீரோடு முத்தமிட்டு
அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
தானும் சென்றாள்
பட்டாசு தொழிற்சாலைக்கு
தன் பிள்ளை பசி அறியாமல் இருக்க

எழுதியவர் : Meenakshikannan (2-Oct-12, 8:06 pm)
பார்வை : 173

மேலே