மலரின் உதயம் - செடியின் வலி !
பத்து திங்கள்
பக்குவமாய் சுமந்த நாட்கள் !
நிலவு காட்டி சோறு ஊட்ட
நானும் காத்திருந்த கணங்கள்
நிமிடத்துக்கு நிமிடம் இறைவனுக்கு
ஆயிரம் ஆயிரம் நேர்த்திகள் !
இத்தனை வலிகள் .. எதிர்பார்ப்புகள்
என்னுள் ஏக்கத்துடன் !
என் பிள்ளையை காணும் தருணத்து
பிரசவ வலி .. வலி !
கண்கள் இருண்டு .. உலகை மறந்த
கணங்கள் ..மரணத்தின் எல்லை !
விழிகள் திறந்தது - என் நெஞ்சில்
காலை பனியது பொழியும் தருணத்து
மலர்ந்த ரோயாவின் இதழ்கள் !
தொலைந்தது வலிகள்
கிடைத்தது புதிய உறவு பிள்ளையாய் !
கன்னியான என்னை தாயாக்கிய
பொழுது ..விடிவொன்று தந்தாய்!
மலடி என்னும் பெயர் மறைய !
காலமெல்லாம் இனி என் வாழ்வு
உனக்கானது !
கவிதையாய் என் இதயம்
என்னும் புத்தகத்தில் நீ !
தாஸ்

