இந்தக் கொசுவிற்கு மூக்கு நீளம்.
என்னைக் காதலிக்கக்
கிளம்புவதற்கு முன்....
கழிவு நீர்க் கண்ணாடியில்
தன் மூக்கைத் திருத்தி
சிறகுகளைச் சரி செய்து கொள்கிறது
இந்தக்...கொசு.
*****************************************************************
இன்னமும் உலரவில்லை....
"ஹே!ராம்...!"-லிருந்து
சிதறிய இரத்தத் துளிகள்....
நீண்டு கொண்டே இருக்கிறது
இன்று வரை....
இந்தியாவிற்காகத்
தன்னைச் சிந்தியபடி.
******************************************************************
ஜனநாயகத்தில்....
வெறும் நீராய் இருப்பதில்லை
இந்த நதி.
சில நேரங்களில்
இரத்தமாகி விடுகிறது.
******************************************************************
செய்தித்தாள் போட்டபடி
சைக்கிளில் சுற்றும்
இந்தச் சிறுவனின் பின்னால்
அலையும் எனது கவிதை....
வலிகளோடும்....வடுக்களோடும்
உதிர்ந்து கொண்டிருக்கிறது
சுதந்திரத்தின்...
மகா வாக்கியத்தில்.
*******************************************************************