:::ღ ღ உயிரைத் தேடிய பயணம் ღ ღ:::

இணையத்தளம் மூலமாக தகர்க்கப் பட்டன அவனின் இதயம்...... கவிதையோடு கலந்தவனாய் இணையத்தளங்கள் மூலம் தன் உணர்புகளைப் பதிவு செய்து வந்த அஜயை முகநூலும் விட்டுவைக்கவில்லை. களம் தேடி அலைந்த அவனுக்கு ஒரு ஆறுதலாய் அமைந்தது முகநூல். ஏதோ ஒரு மூலையில் இருந்து அஜயின் கவிதைகளை ரசித்து வந்தாள் ஜனனி. முகம் அறியாத அறிமுகம் ஆரம்பத்தில் நட்பாய் தொடங்கியது. கவிதைகளை விமர்சித்து வந்த ஜனனி அவன் கவிதையாகவே மாற இவர்களது நெருக்கம் காதலாக மாறியது. கண்டதும் காதலில்லை இது முகமறியாக் காதல் கவிதையாகவே உரு மாறிய அவனின் காதல் முகம் அறியாத அவளையே வர்ணிப்பதாய் அமைந்தது. இருவருக்குமிடையில் உள்ள தொடர்பு இணையத்தளத்தை தாண்டி தொலைபேசி மூலமாக நீடித்து இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாறிக் கொள்ள அவர்கள் நித்திரை தான் பாழ் போனது என நினைத்த அவனுக்கு அன்று புரியவில்லை பாழ் போய்க் கொண்டிருப்பது தன் வாழ்க்கையென்று. ஜனனி ஒரு தொழில் பயிற்சி நிறுவனமொன்றில் Soft Ware பயிற்சி ஆசிரியையாகவும் அதன் பொறுப்பாளராகவும் இருந்தாள். ஆனால் அவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான் எனத் தெரிந்து கொள்ள ஜனனிக்கு திடிரென ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தான். அஜய் ஒரு கம்பியூட்டர் ஹாட்வெயார் இஞ்ஜினியர் என்பது அப்போதுதான் தெரிந்தது ஜனனிக்கு. இருவருக்கும் அளவில்லாத சந்தோசம் அவனை அளவில்லாமல் காதல் செய்தாள். அவன் வெளியூரில் தொழில் செய்து கொண்டிருப்பதனால் அவளின் விடுமுறை தினங்களில் அவள் ஸ்கைப் (skype) மூலமாக முகம் பார்த்து பேச ஆரம்பித்து முழுமையாக காதலில் மூழ்கினாள். கால ஓட்டத்தில் நேரம் வேகமாக ஓட கனவுகள் மட்டும் மாடி வீடுகளாய் உயர்ந்தது. அப்போதுதான் அவனுக்கு சரிவாக ஒரு சாக்கடி கொடுத்தாள் ஜனனி. தன் திருமணம் தன் வீட்டார் விருப்படியே நடக்கும், அவர்கள் முடிவுக்கே தான் தலைசாய்வேன் எனச் சொன்னாள் உடைந்து சோர்ந்த அஜய் அவளின் மனம் துன்புறும் படி எதையும் பேசாது மௌனமாக தன் நிலையை வெளிக்காட்டினான். நம் உறவு எப்போதும் பிரியாத அன்பாய், பிரியமாய் இருக்க வேண்டும் அஜய் எனச் சொல்லி தன் தொடர்பைத் துண்டித்தாள் தொலைபேசியில் மனதுடைந்தாலும் மனிதனாக வாழத் தொடங்கினான் அஜய். மிண்டும் அவளின் தொலைபேசி அழைப்பு
“ அஜய் உன்னிடம் ஒன்று கேட்கப் பேன் எனக்காக அதனைச் செய்வீயா?”
எனக் கேட்டாள்.அவளுக்காய் உயிரைக் கூட கொடுக்க தயாராக இருந்த அஜய் ஆவலுடன் என்ன ஜனனி? எனக் கேட்டான். அவளோ

ஆசையாய் ”ஒரு முத்தம் கொடு”
என அவளின் ஆழ் மனதின் ஆசையை வெளிக்காட்டினாள். பலமுறை மறுப்புக் காட்டிய அஜய்யால் எதுவும் செய்யமுடியாமல் அவள் ஆசைக்காய் ஒரு முத்தம் கொடுத்தான். அந்த ஒரு முத்தத்தால் ஜனனி நித்தமும் பேச ஆரம்பித்தாள்.

மீண்டும் தொடர்ந்தது காதல். அவ்வாறே இரண்டு ஆண்டுகள் தொலை பேசியில் கழிந்தது. சத்தமில்லாத பேச்சு, மூச்சு இல்லாத முத்தம் என இரவுகள் விழிக்கத்தொடங்கியது. அவனோ ஹாட் வெயார் இஞ்ஜினியர் என்பதனால் அவனுக்கு வேலைகள் அதிகமாக அவன் வேறு ஒரு நாட்டிற்கு ஒரு மாதம் வேலைக்குச் செல்ல வேண்டிய காட்டாயத்தில் சென்றுவிட்டான். அதனால் ஒரு மாத இடைவெளி மட்டும் அவர்களால் பேசிக்கொள்ள முடியவில்லை. இருந்தும் அவன் வேலையில் காட்டும் கவனத்தை விட அவளின் நினைப்பிலே கவனமாகவே இருந்தான்.எல்லாம் அவளெனக் கொண்டான்.அப்போதுதான் திரைப் படத் திருப்புக் காட்சியாய் அவள் வாழ்க்கையை பற்றி சொல்லி தன்னை மறந்துவிடும்படி அழுதாள் ஜனனி.
அவளின் திருப்புக் காட்சியைக் கண்டு கல்லில் விழுந்த கண்ணாடித்துண்டுகளாய் சின்னா பின்னமானது அஜய்யின் மனது. உடைக்கப்பட்ட அவனின் இதயத்துகழ்கள் மீண்டும் ஒட்டிக் கொண்டது கண்ணீர்த்துளிகளால். அப்போதுதான் காதல் வலியையும், உப்பின் காரத்தையும் உணர்ந்து கொண்டான் அஜய். அழுத கண்ணீர் காய முன்பு அவன் வார்த்தைகள் மீண்டும் பூத்துக் குலுங்கத் தொடங்கியது. எந்த ஒரு பெண்ணும் வெளிக்காட்டாத உண்மையை ஜனனி அஜையிடம் மறைவின்றிச் சொன்னதனால் அவளையே தன் மனைவியாக்க வேண்டுமென்ற கொள்கையை உருவாக்கினான் அஜய். தான் ஒழுக்கத்தை மீறி பெண்மையைப் பறி கொடுத்து விட்டேன் எனச் சொல்லியும் அவளை மணக்க அஜய் முடிவு செய்த காரணம் புரியவில்லை. ஆனால் அவனோ தன்னிடம் உண்மைகளைச் சொன்ன ஜனனி என்றும் உண்மையாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் முட்டாள் ஆனான்.
நாள் தோறும் இரவு வேளைகளில் மணிக்கணக்காக அவர்கள் தொடர்பு நீடிக்க ஆரம்பித்தது. யாரும் இல்லாத இரவு, அமைதியான சூழல், பனிமலரும் அதிகாலையில் வார்த்தைகள் உச்சம் பெற்று வரம்பு மீறிய வேளைகளில் உணர்ச்சியைத் தூண்டும் ஆசை வார்த்தைகளை அளவில்லாமல் கொட்டிய ஜனனி அடிக்கடி அஜய்யின் வர்த்தைகளினால் தான் கருவுற்றதாக செல்லமாகச் சொல்லி விளையாடி எப்போது இருவரும் ஒரு கட்டியில் இறுக்கக்கட்டி அணைத்தபடி ஒன்றாகத் தூங்குவது என அடிக்கடி வினாவும் அவள் ஒரு சில நாட்களுக்குள் பேச்சை குறைத்துக் கொண்டாள்.
என்ன? ஏது? என அறியாத அஜய் பற்றிப் பதறி அவள் நண்பர்கள் முலமாக அவளைத் தொடர்பு கொண்ட போது வீட்டில் மாப்பிளை தேடுகின்றார்கள் அஜய். அவர்கள் தேடும் மாப்பிளை நீயாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் நான் சின்ன வயதில் இருந்து ஆசைப் பட்டது எதுவும் நிறைவேறவில்லை அதனால் நீயும் அப்படியே போய் விடுவாயோ என்றுதான் பயமாக இருக்கு எனச் சொல்லிக் கொண்டு அழத்தொடங்கிய ஜனனி தன் வீட்டில் தொடர்பு கொண்டு ஜனனியின் அம்மாவுடன் பேசும் படிசொன்னாள். அவர்களோடு எப்படிப் பேசுவதென்று அறியாத அஜய் அவளை ஆறுதல் படுத்தினான். அப்படியே ஐந்து மாதங்கள் கடந்த பின்பு அவள் ஆசைகள், உணர்புகள் எல்லாம் கூடிக் கொண்டே போக.....
ஜனனி அஜய்யிடம்
” அஜய், என்றள் அவனோ ம் என்பதை தவிர வேறு தேதும் பேசவில்லை ஜனனி பெசத் தொடங்கினாள்.
*உன் மடிமீது தலை சாய்த்து யாரும் இல்லாத தனிமையில் கதை பேசவேண்டும்.*
*கட்டி அணைத்தபடியே நம் காலங்கள் கழிய வேண்டும் *

இதைக் கேட்டவுடன் சிரித்தான் அஜய்.

ஏய் என்னடா இப்பவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாய் மீதியையும் கேழுடா செல்லம் என்றாள் ஜனனி. எதையவது சொல்லு ஜனனி நேரமாவது போகட்டும் என்றான் அஜய். இரண்டே இரண்டு

இரண்டே இரண்டு குழந்தைகள் பெற வேண்டும். என்றாள். உடனே சிரிக்கத் தொடங்கினான் அஜய். அவனின் வாய் வலிக்கும் மட்டும் சிரித்தான். கோபப்பட ஜனனி ஸ்கைப் வீடியோவைத் துண்டித்தாள். அவள் ஆசைகள் அவலை விட்டுவைக்கவில்லை மீண்டும் பேச ஆரம்பித்தாள் “ இப்போ சிரிக்கிறாய் ஒரு நேரம் என்னிடம் கெஞ்சத்தான் போகின்றாய்” என்றாள். என்னடி இப்படி ஒரு குண்டைத் தூகிப் போடுகின்றாய் என்றான் அஜய். ”ழந்தைகள் பெற்ற உடனே என் பக்கத்திலும் உன்னை வரவிடமாட்டேண்டா திருடா” எனச் சொல்லி சிரித்தாள் ஜனனி.
அடுத்த நாள் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்திய ஜனனி, அஜய் உன் ஜாதி என்ன? உன் ராசி என்ன? நட்சத்திரம் என்ன? என வினாக்களை எழுப்பினாள். ஏன்? என்ன? என அதிசயித்த அஜய் அவள் வினாக்களுக்கு விடையழித்த போது அவளுக்கு செவ்வாய் தோசம் இருக்கிறது எனச் சொன்ன ஜனனி. அவள் அம்மா சாதி மதம் பார்ப்பவர் எனச் சொல்லி அமைதிப் படுத்தினாள்.
யாருக்குத் தெரியும் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் இன்னொன்று நினைக்குமென்று? பாவம் அஜய்யின் வாழ்கை அப்போதுதான் கேள்விக் குறியாக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அஜய் சுகவீனமாய் இருப்பதை அறிந்து கொண்டாள் ஜனனி. அதனை அவனிடம் பலமுறை கேட்டும் அவன் மறுத்து விட்டான். பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவதைப் போல அவன் கஸ்ரத்தில் துடிப்பதை அவதானித்து விட்டாள். அபோதுதான் அவன் உண்மையைச் சொன்னான். தனது சுவாசப் பை சிதைந்துள்ளதாகவும் தன் உயிருக்கு ஆபத்து எனவும் டாக்டர் கூறியதாய்ச் சொன்னான். உடனே துடித்துப் போனாள் ஜனனி. தினமும் இது பற்றி விசாரித்து அறிந்து கொண்ட ஜனனி அவனை விட்டு விலக முடிவு செய்தாள் போலும் அவன் தொடர்பைத் துண்டித்து விட்டாள்.வைத்தியசாலையில் உயிருக்காய்ப் போராடிய அஜய்யின் நிலை பரிதாபமாகக் காணப்பட்டது. அவனின் தகவலை யாருக்கும் சொல்லாத படி அவன் தன் தொலைபேசியில் அனைத்து இலக்கங்களையும் மறைத்து விட்டு ஜனனி, மற்றும் ஜனனியின் தோழி ஆகியோரின் இலக்கங்கள் மட்டுமே வைத்திருந்தான். ஜனனிக்கு Call செய்தார் டாக்டர். அவளின் இலக்கம் தடை செய்யப் பட்டிருந்தது, அவளின் தோழிக்கு அழைப்பு கொடுத்தார் அவள் அதற்கு பதிலழிக்க வில்லை. எனவே SMS மூலமாக டாக்டர் அஜையின் நிலையை அவளுக்கு சொன்னார். அதனால் அன்று மாலைப்பொழுதினிலே ஜனனி Call செய்து தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாய் சொன்னாள்.அழுதாள், அவன் நிலையைக் கேட்டு விசாரித்தள். அப்போதுதான் இன்னும் ஒரு மாத காலம்தான் அஜய் உயிர்வாழலாம் என்பதும் தெரிய வந்தது. அவன் உயிரைக் காப்பாற்றுவதென்றால் உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்ற உண்மை அவளுகுத் தெரிந்தது. அப்போது நாட்டிற்கு வரப் போவதாகச் சொன்னான் அஜய். மிகவும் சந்தோசப் பட்டாள் ஜனனி.
அதே போன்று அவனின் உயிரைக் காப்பாற்றவும், அவன் உயிரான ஜனனியைத் தேடியும் நாட்டுக்குப் புறப்பட்டான். கனவுகளோடும், கற்பனையோடும் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவன் அவசர அவசரமாய் அவளுக்கு Call செய்து தான் வந்துறங்கிய செய்தியை சொன்னான் அவளுக்கு. அன்றிலிருந்து நான்கு நாட்கள் இரவில் பேச ஆரம்பித்தாள் ஜனனி. ஐந்தாவது நாள் வேலை நிமிர்த்தம் தான் கொழும்புக்குச் செல்லவுள்ளதாகவும் அஜயையையும் வரும் படி சொன்னாள்.
அஜய்யும் அவளைக்கான தனிமையில் கொழும்புக்குப் புறப்பட்டான். அவன் பல ஆண்டுகள் கழிந்து தெரியாத ஒரு இடத்துக்குச் சென்று ஒரு நாள் முழுதாகக் காத்திருந்தான். அவள் வரத்தாமதமாக தாமதமாக அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவனின் உடல் நிலையும் தாங்கிக் கொள்ளவில்லை நிமிடத்துக்கு நூறு முறை Call செய்தான். அவள் வருவதாய்ச் சொன்னாள் ஆனாலும் அஜய்யால் அங்கு நிக்கமுடியாமல் வாடி வதங்கியவனாய் நின்றுகொண்டிருந்தான். அப்போதுதான் தென்றல் வீசியது அவன் பக்கம் அவள் மெல்ல நடந்து வந்தாள் மாலை நேரம்.
அருகில் வந்த அவள் “ அஜய் சொறிடா, ரொம்பதான் லேட்டாகிற்று செல்லம் “ எனச் சொல்லிக் கொண்டு அவன் கைகளை பற்றியவாறு ' வீச் ' நேக்கிச் சென்றாள். அஜய்யால் எதுவும் பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவனின் உடல் நிலை மோசமான நிலையில் இருக்க அவன் இருந்து பேச முடிவு செய்தன். அந்த இடத்தில் இருந்து பேச முடியாததனால் பக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் றூம் எடுக்க முடிவுசெய்தனர். அவ்வாறே செய்த அவர்கள் உள் நுழைந்த்தும் கதவைப் பூட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவாறே பேச ஆரம்பித்தனர். அப்போது ஜனனி அஜய்யின் மடியில் தலைசாய்த்து ‘ இப்படியே இருக்க வேண்டும் போல் இருக்கிறது அஜய் ‘ என்று சொன்ன அவள் திடிரென்று அவன் இதழ்களில் முத்தமிட்டு I LOVE U அஜய் என்றாள்.
சிறிது நேரம் அவ்வாறே பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து இருவரும் விலகிச் சென்றார்கள். அன்று சென்ற அவள் மிண்டும் அவனோடு எந்தத்தொடர்பும் இல்லை. இடையில் ஒரு SMS செய்தாள் “ அஜய் நான் லண்டன் மாப்பிளை ஒருவரை கல்யாணம் பண்ண சம்மதித்து விட்டேன்” இனிமேல் என்னைப் பார்க்கவோ, பேசவோ முயற்சிக்க வேண்டாம். என்னை மறந்து விடு. Verry Sorry அஜய் என்று சொல்லி அஜய்யின் காதலுக்கு முற்றூப் புள்ளி வைத்தாள் ஜனனி.
ஏமாந்து போன அஜய் மீண்டும் புது வாழ்விற்காய் பயணிக்கின்றான் கனவுகளோடு......

முற்றும்.
-யோ. கமல்ராஜ்-

எழுதியவர் : கமல்ராஜ் (3-Oct-12, 11:45 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 407

மேலே