வேசி
மூவாறு வயசிலே
குத்தவச்சவ நான்
முழுசா ஒருவேளை
கஞ்சுகூட கிடைக்கலையே
பசிக்கும் பசிக்குதடா
ஈரத்துணியில் வழிதேடி
நாட்களுக்கும் நரை விழுந்தது
ஒருவேளை கஞ்சுக்கு
வேலைக்கு விட்டான் எங்கப்பன்
பகலெல்லாம் துக்கம்
இரவில்தான் வேலையாம்
வேசி என்று பெயர்வச்சாங்க
சாகத்துணிந்தவளுக்கு
இருட்டறைதான் துணையாச்சு
இரவுகள் நரகமானது
மேனிஎங்கும் ரணமானது
சுகம் தேடி அலையும் கூட்டங்களுக்கு
பொறியில் மாட்டிய எலிகள் நாங்கள்
எங்களை வேட்டையாடும்
புலிகள் இங்கு ஏராளம்
உயிரில்லா உடலாய் பிணமாய்கிடக்கின்றோம்
பிணந்தின்னும் ஓநாய்களே
சொல்லமுடியாத இடமெல்லாம் வலிக்குதடா
உங்களுக்கு இறக்கமில்லையா -இல்லை
அந்த கடவுள்தான் இங்கில்லையா
யாரேனும் எங்களை காப்பாற்றுங்களேன்
உடலை மீட்டாவது அடக்கம் செய்யுங்களேன்
அடுத்த ஜென்மம் இருந்த
பெண்ணாக மட்டும் வேண்டாம்
இது ஒரு பாவ பொறப்பு
வேண்டாமடா
இனி ஒரு ஜென்மம்
வேண்டாவே வேண்டாம் இதுபோதும்