உயிரே
![](https://eluthu.com/images/loading.gif)
உயிரே!
விலகாதே
பழகிய இதயத்துக்கு புரியாதே
தனிமையின் வேதனை தராதே
சேர்ந்து ரசித்த கடல் அலைகள்
நினைவலைகளாய் மாறி
என் இமை நனைக்க வைத்தாய் !
நம்மோடு கை கோர்த்த
சாலைகள்
என்னோடு பயணிக்க
மறுக்கிறது!
இரவறியும் என் கண்ணீரை
பகல் அறியும் என் நிழலை
உரிமையின் போராட்டம்
இனி உச்சக்கட்டம் !
சொந்தம் என நினைத்தது
தூரம் போனது
சிரிப்பின் இசைக்கு
அழுகை ,குரல் தந்தது !
வாழ்கையே நிழல் போல் ஆனது
கருமையும் ஒரு வண்ணம் தானே !
என தேற்றி கொண்டேன் .