@@@@@ அழகு என்பது @@@@@

தத்தித் தவழ்ந்து
தடுமாறி நடைபழகி
தித்திக்க திகட்டப் பேசிக்
கொஞ்சும் மழலை !

ரசிக்க வைத்து
ரகசியம் பேசும்
சற்றும் சத்தமில்லாத
இயற்கையின் மொழி !

இன்பமோ துன்பமோ
இடைவிடாது போராடி
இம்மை வென்றுவிட
நினைக்கும் மனித வாழ்வு !

அன்பு ஒன்றே
அடக்கி ஆளும் கருவியென
அபூர்வமாய் எண்ணும்
கருணை கொண்ட உள்ளம் !

அநியாயம் கண்டு
அமைதியை வெறுத்து
ஆதங்கம் கொண்டு
துடித்திடும் நெஞ்சம் !

எழுதியவர் : புலமி அம்பிகா (7-Oct-12, 12:19 am)
பார்வை : 197

மேலே