தாய் மடிந்த பொழுது

எந்தன் தாயே கருவில் என்னகொர் உருவம் கொடுத்தாயே!
எந்தன் தாயே உன்னில் என்னை சேர்த்து வளர்தாயே !
கடமை முடியும் வரை காத்து இருந்தாயே!
மடிந்த பின்போ நித்திரை கொண்டாயே !

இனியும் உந்தன் தோளில் என்னை சுமப்பாயோ!
இனியும் உந்தன் கையில் உணவு கொடுப்பாயோ !
இனியும் உந்தன் அன்பை ஆராய் பொழிவாயோ!
இனியும் என்னுடன் நிழலாய் இருப்பாயோ!

எங்கு செல்வேன் என்னை சுமந்த உந்தன் தோள்களுக்கு!
எங்கு செல்வேன் என்னக்கு உணவிட்ட உந்தன் கைகளுக்கு !
சிரித்து மகிழ இனியும் இல்லை இங்கு நீ எனக்கு!
நினைவில் கொண்டு வாழ வேண்டும் தவறோ என் கணக்கு!
அடுத்து பிறவியும் உனக்கு நானும் மகனாய் பிரப்பேனா !
மீண்டும் என்னை உந்தன் கருவில் நீயும் சுமப்பாயோ!
என்னை சும்மந்த உன்னை நானும் இன்று சுமந்தேனே !
காண விழிப்பாயோ! நீயும் காண விழிப்பாயோ !

இந்த கடன் கொண்ட பாவியை காண விழிப்பாயோ!.....

சிவ சித்தன்

எழுதியவர் : சிவ சித்தன் (8-Oct-12, 3:51 pm)
பார்வை : 161

மேலே