இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும் - நல்லக்கண்ணு..! பிறகு ஏன் இலங்கையில் குண்டு போட்டு கொன்றீர்கள் இளைஞர்களை..?!

நாட்டில் லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தறுவதன் மூலமே இந்த அவல நிலையை மாற்ற முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.

எல்லாவற்றையும் துறந்து சிறைகளில் பல ஆண்டுகள் இருந்தவர்கள் கூட பதவி என்ற ஆசைக்கு அடிமையாகி விடுகிறார்கள். மண், பொன்,பெண் ஆகியவற்றை துறந்தவர்களை முற்றும் துறந்த முனிவர் என்கிறோம். இனி இந்த வரிசையில் பதவி ஆசையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் நல்லக்கண்ணு அவர்கள்.

நாட்டுக்கும் மக்களுக்கும் பாடுபடுவேன், அறிவியலை வளர்ப்பேன் என்று சொல்பவர்கள் இல்லை,மாறாக இஞ்சினியர் ஆவேன் மருத்துவர் ஆவேன் என்று தான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், நாட்டில் லஞ்சம் பெருகிவிட்டது. லஞ்சமும் ஊழலும் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. தலைமைப் பண்பு குறைந்து விட்டது. தனி மனித ஒழுக்கம் மறைந்து வருகிறது என்று முடிக்காமல் மேலும் இவ்வாறு வேறு கூறினார்.

குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றன. நம் நாட்டின் பலமே நம் குடும்ப உறவுகளும், சீரான வாழ்க்கை நெறிகளும் தான். தனி மனித ஒழுக்கம் மூலமே நாட்டின் பண்பாட்டை காக்க முடியும். இதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்று தந்தாக வேண்டும்.

தாய்மொழியே அறிவு வளர்ச்சிக்கு வித்திடும். சிந்திக்க வைக்கும், தாய்மொழி மறைந்து விட்டால் மண் மீது பாசம் வராது. மக்கள் மீது நல்லுணர்வு வராது. அந்த நிலை வராமல் இருக்க, இன்றைய தலைமுறையினருக்கு நாம் தனிமனித ஒழுக்கத்தையும், தாய்மொழிப் பற்றியும் தந்தாக வேண்டும் என்றார்.

எவ்வாறு கற்றுத் தரப் போகிறார்..? இவரின் கட்சி சார்பாக இந்த மாதிரி ஒழுக்கங்களை கற்றுத் தரப்போகிறார்களா..? அல்லது இந்திய அரசு கற்றுத் தர வேண்டும் என்று சொல்கிறாரா...? அல்லது சும்மா எதையாவது பேச வேண்டும் என்று கருதி, ஆகா, சும்மா தானே கிடக்குது இந்த கருத்துக்கள், சொல்லி வைப்போம் என்று இருக்குமா..? உங்களது கட்சி சார்பாக எந்த கருத்துக்களையும் கூறி விடலாம் என்ற மனப்போக்கு தான் இவையெல்லாம் என்று கருதலாமா..?

கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் நடந்தே போய் கதவை தட்டி..தட்டி..சுமார் 50 வருடங்களை ஓட்டி விட்டார் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள். இந்தியாவில் உள்ள அணைத்து கட்சிகளிலும் தலா ஒருவர் இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வாஜ்பாய், தி.மு.க.விற்கு அன்பழகன்...என்று. இவர்கள் மூலம் இதுபோன்ற அறவியல் கருத்துக்களை சொல்வது. வெறும் வார்த்தைகள் தானே... சொன்னால், பேசினா அவை என்ன என்று கேட்கப் போகின்றனவா என்று கூட இருக்கலாம்.

இலங்கையில் திரு பிரபாகரன் தலைமையில் இளைஞர்கள் மட்டும் அல்ல அணைத்து வித மக்களும் அறநெறியை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்களே...தமிழ் மொழியை செம்மையாக பேசினார்களே..வளர்த்தார்களே
பிறகு ஏன் பீரங்கியால் சுட்டுக் கொன்றீர்கள்..?

அறம், நீதி, நெறி,ஒழுக்கம், மொழி உணர்வு, மக்கள் நலன் என்று பேசினால் தான் தீவிரவாதி பயங்கரவாதி என்று கூறுகிறதே..அரசும் அரசின் ஊடகங்களும் அரசை தாங்கிப்பிடிக்கும் அடிவருடிகளும்.

அப்துல் கலாம் எப்படி கட்டுடைக்கப்பட வேண்டியவரோ, அவரைப் போன்றவர்தான் இவரும். மன்மோகன் சிங் கூட ஒழுக்கம் எளிமை நிறைந்தவர் தான். இந்திய விவாசியகள் அனைவரையும் பால்டாயிலை குடிக்க வைத்து கொல்லவில்லை..?

இடது சார் தன்மை கொஞ்சம் கூட இல்லாமால் ஓட்டு கட்சி நடத்தி விட்டு, இளைஞர்களுக்கு அறிவுரை வேறு. இதைத்தான் சொல்வது கார்ப்பரேட் கால புத்திமதி என்று.

எழுதியவர் : மீள்சிறகு (8-Oct-12, 5:04 pm)
பார்வை : 419

சிறந்த கட்டுரைகள்

மேலே