நீ நான் காதல்

என் முதல் கவிதை நீயாட
என் முதல் பார்வை நீயாட
என் உயிர் முச்சும் நீயாட
என் உயிரில் கலந்ததும் நீயாட

எனக்கானவன் நீதானோ
எனக்காக இறைவன் படைத்தானோ
எனக்காக உன்னை வைத்துகொண்டு
எனக்கான உன்னிடம் என்னை தருவேனோ

என்னுடைய முதல் ஸ்பரிசம் நீயாக
என்னுள்ளேய் காதல் மலர்ந்தது தானாக
என்னுள்ளும் அன்புண்டு கண்டேன் தனியாக
என்னுடயவனை மனதில் வைத்து தானாக

என்னிடத்தில் நீயாய் வந்தாய் - உன்னை
என்னிடத்தில் தந்து சென்றாய், அன்றிலிருந்து
என்னிடத்தில் இதயம் இல்லை உனக்கும்தான்-இனி
என்னிடத்தில் நீ உன்னிடத்தில் நான்....
உன் இனியவள்
டீனு மதி.க

எழுதியவர் : டீனு மதி.க (8-Oct-12, 7:01 pm)
சேர்த்தது : mathee
பார்வை : 168

மேலே