உயில்
மறைந்து போன நினைவுகள் மறந்துவிட்டது.
கரைந்து போன கண்ணீர்த்துளிகள் தீர்ந்துவிட்டது.
உடலும் உயிரும் ஒன்றே என்றாலும்
என் மனம் மட்டும் தனித்துச் சென்றது.
என் கனவுகள் எல்லாம் கனவாக.
என் காதல் மாளிகை துகள்களாக.
என் இதயத்தை காதலிற்கு எழுதிவைத்து
என் உயிரை நெருப்பிற்கு இறையாக்கிவிட்டேன்.