பேசும் கண்ணீர்
கண்களில் ஏனோ கானல் நீர்
அனுப்பி வைத்தவன் என் அன்பே நீதானோ!
என்னை விட்டு நீங்கினால் என் உடலில்
ஓர் செல்லும் இயங்காது.
உன் நினைவுகளை அள்ளி முடிந்துக் கொண்டால் என் மனமும் நறுமணம் காணும்.
நீ கொடுத்து அனுப்பிய பரிசுப் பொருட்களும் என்னிடம் கண்ணீர் கொண்டு பேசுகின்றது.
நீ விட்டுச் சென்ற வார்த்தைகளெல்லாம்
என் உயிருடன் உலாவிக் கொண்டிருக்கின்றன.
என் அறைகள் முழுவதும் உன் பொன் சிலைகள்.
என் இதயம் முழுவதும் உன் நினைவலைகள்.
பிரிவுகளும் என்னிடம் பரிவு காண்பிக்கும்
என் கண்களின் கண்ணீர் கண்டு.
அன்புப் பூக்களை என் கூந்தலில் சூடிவிட்டு
ஏனடா காய்ந்த சருகாக்குகிறாய் நம் காதலை.
என் இமை மூடி உயிர் நின்றாலும்
என் இதய விழிகளில் உன் துடிப்பே.