என்னைச் சேர்ந்துவிடு
கணம் நூறு சென்று விட்டது,
காதல் நெஞ்சை உன்னிடம் கொடுத்து....
ரணம் யாரு விட்டுச் சென்றது,
ரௌத்திரம் செய்யும் உன் கண்களுக்கு அடுத்து...
கரையாத கல்லோ மங்கையின் நெஞ்சம்,
என் அயராத தேவையோ, அவளின் நினைவு மட்டும்....
கல்லைக் கரைக்கும் கலவை நானோ,
கல்லைக் கரைப்பதற்குள் நானே கரைந்து விடுவேனோ...
வண்ணம் பூசா வானவில் நானோ,
என்னை, வானம் கூட தீண்டுவதில்லை...
நிறங்கள் ஏழின் சேர்க்கை நீயோ,
நீ வந்து சேர்ந்தால், மேக நிழல் கூட என்னை நேசிக்குமடி...
நீ என்னைச் சேராத போதும்,
உன் நிழல் மட்டும் கொடுத்துவிடு...
நிஜம் என்று எண்ணி வாழ்வேன்,
உன் நிஜத்தின் நிழலோடு...