என்னவனே!!!
உனக்கான என் கனவுகளுடன் விழித்துக் கொண்டிருப்பேன் நான்
தட்டி எழுப்ப நேரமில்லாமல் வலைத் தளங்களில் ஆழ்ந்திருப்பாய் நீ
உன் செல்பேசி அழைப்புக்காக நாளெல்லாம் காத்திருப்பேன் நான்
வேலையில் மறந்து விட்டேன் என்பாய் நீ
உனக்காகவே புத்தாடை உடுத்தி நிற்பேன் நான்
கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ
உன்னிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே சின்ன சின்ன சேதியுடன் காத்திருப்பேன் நான்
கேட்காமல் அவ்வளவு தானே என்பாய் நீ
உன்னிடம் கோபம் கொன்டு பேசாமலிருப்பேன் நான்
கண்டு கொள்ளாமல் தேநீர் பருகுவாய் நீ
இத்தனை குறைகளையும் நிறைவாக்கி விடுகிறாய்
என்னுடன் பேசும் அந்தக் கணம் நீ……………