சொத்து
அரசர்களின் சொத்து,
அரசாங்கத்திற்குச் சொந்தம் -- நேற்று !
அரசாங்கத்தின் சொத்து,
அரசியல்வாதிகளுக்குச் சொந்தம் -- இன்று.. !!
அரசியல்வாதிகளின் சொத்து,
அரசாங்கத்திற்குச் சொந்தம் -- நாளை....!!!
நேற்று என்பது -- வரலாறு !
இன்று என்பது -- நிகழ்வு..!!
நாளை என்பது -- புரட்சி....!!!