எட்டி நில்லுங்கள்
நாங்கள்
கடலைச் செடி
பிடுங்க வந்தோம்.
அதிகமான காய்ப்பு –
வேர்களை விட,
விரல்களில் !
குனிந்து குனிந்து
விதை விதைத்தோம்.
குனிந்து குனிந்து
களை எடுத்தோம்.
குனிந்து குனிந்து
உழைத்ததால் -
சிலர்
குட்டுவதற்கு
வசதியாகப் போனோம்.
கொஞ்சம் எட்டி நிற்கிறீர்களா,
நாங்கள் நிமிர வேண்டும் !
பல்லக்கு தூக்கிய எங்களுக்கு –
உள்ளுக்குள் உட்கார
இப்போது ஆசை !
கொஞ்சம் எட்டி நிற்கிறீர்களா,
நாங்கள் நிமிர வேண்டும் !!