இது எனது வேதனை .

என் கண்களில் கண்ணீர்
உன் கண்களில் சந்தோசம்
ஆனாலும் என் உள்ளத்தில்
வைராக்கிய எண்ணம் இல்லை
அன்று நான் உன்னிடம்
அறியாத எண்ணம் ஒன்றை பெற்றேன்
கடலளவு அன்று
அன்பை சேகரித்தேன்
அந்த கனவை எண்ணி எண்ணி
என் கண்கள் நனைந்தன
நான் எழுதும் கவிதையின்
வேதனை கேட்டு
அந்த சோகத்தில்
உன் கண்களையும் நனைக்கும்
இந்த கவிதையை
நான் எழுதியது
உனக்கு வலி
ஏற்படுத்துவதற்கு அல்ல
இது எனது வேதனை .....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (13-Oct-12, 9:35 am)
பார்வை : 363

மேலே