உதிரும் இலைகள்

உதிரும் இலைகளே
உறங்க வேண்டாம்
உரமாகுங்கள் - நாளைய
மரங்கள் செழிக்கட்டும்

சிந்திய உதிரங்களே
உறைய வேண்டாம்
ஒன்று சேருங்கள் - புது
காவியம் பிறக்கட்டும்

வாடிய மலர்களே
வருந்த வேண்டாம்
வாசனையை பரப்புங்கள் - உங்கள்
வருகை பதிவாகட்டும்

சாத்திரத்தால் சாய்ந்த தன்டுவடங்களே
சரிய வேண்டாம்
சற்றே நிமிருங்கள் - உங்களின்
சரித்திரம் எழுதபடட்டும்.

எழுதியவர் : மொழிஇனியாள் (13-Oct-12, 8:31 pm)
பார்வை : 346

மேலே