பிடித்ததும் பிடிக்காததும்

பெண்ணுக்கு பிடித்தது

நீ அழகு
உன் நிழல் அழகு
கேட்டதென்ன உன் குரலா
கேட்டதிலே இது பேரழகு
சேலையா, சுடிதாரா, ஏன்
ஜீன்ஸ் ஷர்ட்டும் உனக்கழகு
நகை எங்கே வாங்கினாய் நீ
நல்ல சுவை உன் நகைஅழகு
நீ என்ன சமைத்தாலும்
உன் சமையல் கலைஅழகு
உனைப் போல ஒரு பெண்ணா
உன்னப் பார்த்தாலே உலகழகு

பெண்ணுக்கு பிடிக்காதது

அவள் அழகு
அவள் முகம் அழகு
அரிதாரம் பூசாத
அவள் தேக நிறத்தழகு
நடனம் அவள் ஆடினாலோ
நடனத்துக்கே பேரழகு
குரல் கேட்டால் திரும்ப வைக்கும்
கனிவு அவள் குரலழகு
சமையல் அவள் கைபட்டால்
சுவை மட்டும் தனியழகு
அவளைப் போல் ஒரு பெண்ணை
அடைந்தால் தான் உலகழகு

எழுதியவர் : நா.குமார் (13-Oct-12, 11:57 pm)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 181

மேலே