ஊத்தப்பல் கிழவி (சாதலின் பிறவிப்பயன்)

தாடை சுருங்கியது!
வாழ்க்கை ஓடை
சுருங்கியது!
கிழவன் கிழவியின்
காதலில்
சுருக்கம் இன்னும்
இல்லை!
. . . . . . . . . . . . . . .நன்றி
. . . . . . . . .ஜீவன்
. . . . . . . . . . . . . . . . . . . . .
உன்
பொக்கைவாய்
கூட்டுக்குள்ளே
மலர்ச்செண்டு
மணக்கையிலே
வெத்தளை
தோட்டமெல்லாம்
வெளுத்து
போனதடி உடல்
வழுத்த கிழவி!
பாக்கு மரத்தோட்டத்திலே
கிழவன்
உன்னை
பக்குவமாய்
பார்க்கையிலே
தேக்குமர
தோட்டமெல்லாம்
உளுத்து
போனதடி
என் உயிர்க்கிழவியே!
கருவேளாங்
காட்டுக்குள்ளே
தூக்கணாங்குருவி
கூட்டுக்குள்ளே
காதல் செய்த
காலம்
இனியும்
வருமோடி
என்
கருவறைக்கிழவியே!
வக்கனையாய்
சிரிக்கையிலே
பொக்கையனாய்
போரிட்டு
புறமுதுகில் அம்பிட்டு
சிக்கனமாய்
வம்பிலுத்து,
சிகரத்தை
சீண்டிவிட்டு போவாயடி
பருவநாட்டு
கிழவியே!
பஞ்சணைக்கு
பகரமாய்
உன்
நெஞ்சணையில்
நகரமாய்
என்னை பரவி
விட்டாயடி
பாரிநாட்டுகிழவியே!
தென்னங்கூட்டிலே
தெரியாது
தெருவிளக்கு
பாதையடி!
உன்
கன்னங்கூட்டிலே
நான் கண்டது
பனங்கல் போதையடி!
பக்கத்தூர்
சந்தையிலே
வக்கத்துப்போய்
நான் கண்டது
உன்னைப்பொல்
இன்னொரு
பேதையடி கிழவி!
அந்தகால
வாழ்க்கையிலே
அத்தைமகள்
உன்னை
அணைக்கையிலே
சிம்னிவிளக்கு
அணைந்ததடி!
இந்தகால
வாழ்க்கையிலே
அம்னி யென்று
உன்னை
அணைக்கையிலே
சிம்னி விளக்கும்
சிரித்ததடி!
சுருக்குப்பை
மடிப்பினிலே
என்னை
இறுக்கிப்பிடித்து
மடிக்கையிலே
என் ஆயுள்
கூடுதடி!
குடிமி பிடித்து
சண்டையிட்டும்
கூன் விழுந்த
கிழவனை
குச்சி பிடித்து
கூட்டிப்போறவளே!
செஞ்சூரியன்
உதிக்கையிலே
செம்மண்பொம்மை
காய்ந்துபோகும்
எனச்சொல்லி
நிழலில்
வைத்து
என்னை
அழகுபார்த்தாயடி
அன்புக்கிழவி!
. .. . . .
மழையில்
கரைந்து அது
மண்ணாய்
போகுமென்று
தெரியாதோடி
என்
அத்தைமகள் கிழவி!

தாடை சுருங்கியது
வாழ்க்கை ஓடை
சுருங்கியது!
நம்
காதலில்சுருக்கம்
வந்ததில்லையடி
என்
காதல் கிழவி!

சாதலில்
சேர்ந்தே
காதல் செய்வொம்
வா
என் ஆத்மகிழவி
பிறவிப்பயன்
அடைந்தொம்
வா
இறுதியாய்
பிறவி அடைவோம்!

எழுதியவர் : ருத்ரா (16-Oct-12, 5:58 pm)
பார்வை : 313

மேலே