காதல் கவிதைகள் :

காற்றும் காதல் செய்யும்
உன்னைக் கடந்து செல்லும் பொழுது
நிலவும் உன்னையே நினைக்கும்
உன் மீது ஒழி வீசும் பொழுது ....!!!!

நான் உன்னைக் காதலித்தேன்
வான் மழையாய்
நீ என்னைக் காதலித்தாய்
வானவில்லாக.....!!!!!!

தேன் தான் இனிமையானதென்று
நினைத்திருந்தேன்
உன் இதழ்கள் என்னை முத்தமிடும்
அந்த நிமிடம் வரை ....!!!!!!

எழுதியவர் : சக்திவேல் (17-Oct-12, 4:02 pm)
பார்வை : 204

மேலே