உயிர்த்தெழுந்தாள் மலாலா

---- உயிர்த்தெழுந்தாள் மலாலா -----

விழாமல் இருந்த ஆலமரத்தை
அடியோடு ஆட்டிவிட்டாள்
மலாலா எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றிவிட்டாள்.

கருத்தில் பெண்கள் இவள் போல்
இறுமாப்பு கொண்டால்
ஒடுக்கும் சமூகம்
ஒடுங்கியிருக்கும் என்றோ.....

அதைதான்
அழுத்தித் தமிழில் எங்கள் பாரதி
எழுத்தில் சொன்னா னன்றோ...
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ ?


எம்முடன் கருவில் பிறந்தாலும்
எங்கோ ஒரு மூலையில்
தெருவில் வளர்ந்தாலும்
எங்கள் எதிரிப்போல
உருவில் இருந்தாலும்
நிற இன மதமென
பிரிவில் கிடந்தாலும்
பேசும் மொழி மாறுபட்டாலும்
தேச கொடி வேறுபட்டாலும்
யாமனைவரும் ஒரு
தொப்புள்கொடி அன்றே....
வந்தோம் கதையில்
ஏவாள் ஆப்பிள் கடி தின்றே....

மனித தாகம் தீர்க்கும்
சிறிய ஓடை கூட
புனித கங்கை தானே...

மனித நேயம் கேட்கும்
சிறுமி அவளும் என்
இனிய தங்கை தானே...

தீவிரவாதம் ஒழித்திட வேண்டும்
பெண்ணுக்கு கல்வி கொடுத்திட வேண்டும்
மீண்டும் அமைதி முளைத்திட வேண்டும் .

இவை அனைத்தும் வேண்டி
தொழுதிட்டாள்
அதை எழுத்தின் வடிவே
எழுதிட்டாள்.
ஐயோ அதனால் அவள்
சுடபட்டாள்.


ஆறே நிரம்பும் அளவு
ஊரே வருந்தி அழுது
ஈரேழு பருவ வயது
அவள் பெயரில் இனியொரு
வீர வரலாறு எழுது...

அவளைப் போலே
அநீதி கண்டு கொதிக்கும் நெஞ்சம்
அளவுகடந்து உள்ளது எனக்கும்.

என்னைப் போலே
உறுமும் உள்ளம் கொண்டவர்க்கு
எங்கள் வீர வணக்கம்.

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (18-Oct-12, 1:06 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 251

மேலே