சார் தபால் ,,,,,,,,,,,,,,

சார் தபால் ,,,,,,,,,,,,,,!

இன்று மனிதன் இழந்த

அன்பான வார்த்தை ,,,,,,,,,,,,,,,இது ..


தூரத்து மகனோட

துன்பம் மறைத்த

சேதி சொல்லி

வாடி நின்ற தாயின்

வயது குறைத்த தபால் ,,,,,,,,,,,,,,,,,,,!


தபால்

இது

அன்பைச் சொல்லி

அணைந்து போன

அகல்விழக்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,!


இது

காக்கிச் சட்டைக்குள்

தேக்கி வைத்த

வாழ்த்துச் சேதிக்கு

ஏங்க வைத்த காகித பரிசு ,,,,,,,,,,,,,,,,,,,,,,!


அன்று

உணர்வுகளை உண்மையில்

கலந்துவிட்டு

கனவுகளை கண்ணீரில்

சொல்லிவிட்டு

பறந்து போன தபால்

என்று திரும்புமோ ,,,,,,,,,,,,,,,,,,?????


இப்படிக்கு

கடிதத்திற்கு கடிவாளம் போட்ட கைப்பேசியின் எதிரி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தினேஷ்

எழுதியவர் : தினேஷ்பாபு (19-Oct-12, 9:56 pm)
பார்வை : 190

மேலே