கோவப்படு..!!

காலையில் எழவேண்டுமென்று
ஏழுமணிக்கு மணியடித்தும்
எட்டுமணிக்கு எழுபவனா?

அரக்கபறக்க அள்ளிப்போட்டுக்கொண்டு புறப்பட்டு
சாலையில் வழியிடையில் வருவோரையெல்லாம்
திட்டித் தீர்ப்பவனா?

மதிய உணவையும் தாமதமாக உண்டுவிட்டு
இரவுமுழுதும் ஊர்சுற்றிவிட்டு
வீட்டுக்குள் அடைபவனா?

அரிதாகக் கிடைக்கும் ஞாயிறும்
சில விடுமுறை தனிமைகளையும்
தூங்கித் தொலைப்பவனா?

நல்ல கவிதைகள் சிறந்த எழுத்தாளர்களை
படிக்கவேண்டும் படிக்கவேண்டுமென்று
படிக்காமல் விட்டவனா?

நொடியில் தோன்றும் குட்டிக்கவிதைகளை
எழுதவேண்டும் எழுதவேண்டுமென்று
இருந்திருந்து மறப்பவனா?

வாழ்கையை தொலைக்கும் சோம்பலை
வழக்கமாக்கிவிட்ட சில பழக்கத்தை
நல்லபடி மாற்ற கோவப்படு!

வாழ்கையை இன்னும் சிறப்பாக்க
உன் அலச்சியங்களை நீக்க
உன்னையே நீ கோவப்படு..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (20-Oct-12, 10:21 am)
பார்வை : 267

மேலே