சிரித்தபடி உதடசைத்தாய்...

மின்விளக்கு எரியாத
இருள் சூழ்ந்த இரவினிலும்,
என்கண்கள் அறிந்ததடி
உன்வருகை தெரிந்ததடி...

சிரித்தபடி உதடசைத்தாய்
என்னென்ஜோ விழுந்ததடி,
தேடி பார்த்தேன் இங்கும் அங்கும்
உன் இதழோரம் வாழுதடி...

கணக்கில்லா காகிதங்கள்
உன்னழகை உரைக்குமடி,
மேகம் தானோ கை இரண்டும்
பூமுகத்தை (வெட்கத்தால்) மறைக்குதடி...

வெட்பமான வாடைக்காற்றும்
தாலாட்டு படிக்குதடி,
உன்னை நினைத்து நடந்தாளோ
வெயில்கூட வேன்பனியாய் பொழியுதடி...

புவியீர்ப்பு விசை எல்லாம்
பொய்யாக போனதடி,
நிலவினிலே நீயும் நானும்
நடக்கும் தடம் தெரியுதடி...

எழுதியவர் : பாலாஜி (20-Oct-12, 4:46 pm)
சேர்த்தது : Balaji.C
பார்வை : 186

மேலே