அது ஒரு வதந்தி
எங்கள் ஊர் தெற்குப்பக்கம்
தென்னங்க்கிணறு
அழகிய வட்டக்கிணறு
இருவர் தற்கொலைக் காரணமாக
பேய்க் கிணறு ....
முனிசாமி துணி துவைக்கப் போனான்
அவனுள் பயம் பூத்துக்கொள்ள
சத்தம் கேட்டால் பேய் ஓடிவிடும்
யாரோ கூறியது நினைவு வர...
சட் சட்டென கிணற்றின் சுவற்றில்
சுழற்றிய சட்டை கிழிய....
அலறியடித்து மேலே வந்தவன்
ஊரை நோக்கி ஓடினான்
சத்தம் கேட்டு பேய் ஓடாது
அது ஒரு வதந்தி என்று கூற ....!