பூச்சி தொல்லை!!!

பாலிருக்கும்...ஓஹோ ... பழமிருக்கும் ...ஓஹோ ...
அழுகிவிட்டாலே!
பஞ்சனைகள் நாத்தம் வரும்
தூக்கம் வராதே ...தூக்கம் வராதே!
நாலுவகை கொசு கடிக்கும்..ம்ம்ம்ம் .. ஆள விடாதே..
மலேரியா என்ற நோயும் வந்தால்
ஆளும் தேறதே! (பாலிருக்கும்)

கட்டிலிலே மூட்ட பூச்சி கோட்டை கட்டுமே....உடம்பில்
ஊசியில்லா ஓசியிலே ரத்தம் போகுமே...
தலைக்கு மேலே பேணு வந்து முட்டை போடுமே..
நூறு ஈறுகளும் கடிச்சி கடிச்சி வித்தைகாட்டுமே (பாலிருக்கும்)

அடுப்பறையில்...கரப்பான்பூச்சி கன்னடிக்குதே!
பல்லி துள்ளி குதிச்சு எட்டி எட்டி விசலடிக்குதே...
கள்ளமில்லா எலிகளும் தேங்கா துறுவுதே...
பூனை பானைகுள்ளே மீனை தேடி தேடி போகுதே! (பாலிருக்கும்)

எழுதியவர் : உன்னிகிருஷ்ணன் (23-Oct-12, 7:41 pm)
பார்வை : 796

மேலே