தண்ணிரில் நீந்தவில்லை
தவறு செய்தால் தலையில் கொட்டும் கைகள் இல்லை
கால் தடுமாறும்பொழுது தாங்கி பிடிக்கும் தோள்கள் இல்லை
சேர்ந்து சிரிக்கும் சப்தமும் இல்லை
சந்தோசத்தை பகிர்ந்துகொள்ளவும் யாரும் இல்லை
துக்கம் என்றால் ஆறுதல் கூறும் வார்த்தைகளும் இல்லை
கடற்கரையில் கால் பதித்த சுவடுகளும் இங்கு இல்லை
தொட்டிக்குள்ளே சிக்கிக்கொண்ட சிறு மீனை போல
சுற்றி சுற்றி வருகிறேன், நிம்மதியின்றி தவிக்கிறேன்
தண்ணிரில் நீந்தவில்லை நான் கண்ணீரிலே நீந்துகின்றேன்!!