தோல்வி

புன்னகைக்கு கண்ணீர்
எழுதும் முன்னுரை.

எதிர்கால வெற்றிக்கு
நிகழ்கால வாழ்த்து.

மீண்டும் முயற்சிக்க
ஒரு வாய்ப்பு.

இதயத்தை வலிமையாக்க
ஒரு சந்தர்ப்பம்.

உண்மை நட்பே உணர
ஒரு தேர்வு.

நம் தவறுகளை
காட்டும் கண்ணாடி.

நம் தன்னம்பிக்கையின்
அளவுகோல்.

அறிவாளிக்கு
ஒரு அனுபவம்.

முட்டாளுக்கு
வாழ்வின் முடிவு.

எழுதியவர் : பாத்திமா ஹனா (25-Oct-12, 4:33 pm)
Tanglish : tholvi
பார்வை : 202

மேலே