மின்மினி

ஒரு காட்டில் வாழும்
இருட்டு நான்

ஒரு மின்மினியாய்
வந்தாய் நீ

என்னை நீ மீட்டு தந்தாய்
கண்கள் இருக்கும் பயனை
அறிய வைத்தாய் ...........

தொடரும் இருட்டு பயத்தை
உன் ஒளியை விசி
திணற வைத்தாய்........

சின்ன வெளிச்சம் தந்து
என் எண்ணம் வண்ணமாக
செய்தாய்............

அழகே உன்னால் நான்
உயிர் கொண்டேன்

நீ தான் என் வாழ்வு என்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை என்றேன்

உண்மையை நீ சொன்னாய்.........

இருட்டாய் நீ இருந்ததினால் தான்
எனக்கு மின்மினிபூச்சி என்று
பெயர் வந்தது

நீ இல்லை என்றால்
நான் ஒரு பூச்சிதான்

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (27-Oct-12, 7:08 pm)
Tanglish : minmini
பார்வை : 154

மேலே