மின்சாரக்கடவுள்....?(கட்டுரைக்கவிதை)

கண்ணுக்குத் தெரியாத
சக்தியே கடவுள்....?
மின்சாரம் கூட,
கண்ணுக்குத தெரியாத கடவுள்தான்.

கடவுளை விட பெரிய சக்தி
கடவுளைக்கூட கண்டுவிடலாம்
(நான் தான் கடவுள் என்று
நிறைய பேர் கிளம்பியுள்ளார்கள்)
மிசாரத்தை காணுவது கடினம்

அந்த காலத்தில் மனிதர்கள்
மின்சார மீனால்(ஈல்)
அதிர்ச்சி ஏற்ப்பட்டு
மின்சாரத்தை உணர்ந்ததார்கள்.

பூனை உரோமத்தால்
அம்பரைத் தேய்ப்பதாலும்
ஒரு சக்தி வெளிப்பட்டு
மின்சாரத்தை உணர்ந்ததார்கள்.
(அம்பர் என்பது ஒரு வகைப் பிசின்)

கிரேக்க தத்துவஞானி
தல்ஸ் மிலேடுஸ்
கி.மு.600-ல் ஆய்வு செய்து அறிந்தார்
மின்சாரத்தில் காந்த சக்தியை.

1936-ல் பாக்தாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
பார்த்தியன் மின்பொறி அடுக்கு
அந்த காலத்தில்
நம் முன்னோர்களின்
மின்சார அறிவுக்கு சான்று.

1600-ல் மின்சார தந்தை
வில்லியம் கில்பர்ட்டின்
ஆய்வறிக்கையே
நல்ல தெளிவு தந்தது

1971-ல் பெஞ்சமின் பிராங்க்ளின்
தன் சொத்துக்களை விற்று
ஆய்வு செய்து கண்டார்.
மின் பொறியின் ஆற்றலை

1821-ல் மைக்கேல் ஃபாரடே
தன் அறிவாற்றலால் அறிந்தார்
மின்சார இயக்கியை.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
மின் பொறியியலில்
பெரிய முன்னேற்றம்.
நிகோலா டெஸ்லா,
கலிலியோ ஃபெராரிகள்,
ஆலிவர் ஹெவிசைட்,
தாமஸ் எடிசன்,
ஓட்டோ ஜெட்லிக்கின்,
சர் சார்லஸ் பார்சன்ஸ்,
ஜோசப் ஸ்வான்,
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்,
எர்னஸ்ட் வெர்னர் வோன் சீமென்ஸ்,
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
மற்றும் லார்ட் கெல்வின்
போன்ற விஞ்ஞான ஆய்வாயாளர்கள் மூலம்
மின்சாரம் நவீன வாழ்வின் அடிப்படையானது.

இவ்வாறு கண்டறியப்பட்ட மின்சாரம்
பல வகைகளில் உருவாக்கப்பட்தது
காற்று,நீர்,அனல் மூலம்.
விஞ்ஞானத்தின் உச்ச கட்டமாக
அணுஉலைகள் மூலம்
இன்று உருவாக்கப்படுகிறது.

கடவுளைப் போல் சக்தியான
இந்த கண்ணுக்கு தெரியாத
மின்சாரக் கடவுள்
அவரைப் போலவே
விவாதத்துக்கும் போராட்டத்துக்கும்
காரணமானது ஆச்சரியமில்லை!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (28-Oct-12, 11:32 am)
பார்வை : 142

மேலே