மாதவிடாய்க்கிளிகள்(பேழைக்குள் அபயக்குரல்)

அப்பெண்ணின்
அபலைச்சத்தம்,
அக்னிக்குண்டலத்தின்
அடியில்
புதைக்கப்பட்ட
தேசத்தின் தேசிய
கீதம்!
ஒடுக்கப்பட்டதெருவில்
ஒண்டியாய்,
வேசியென்று
கொடுக்கப்பட்ட கருவில்
நொண்டியாய்,
மலவாய் வழியே,
மண்டியிட்டு
விழுந்த பிள்ளையும்,
மண்ணைத்திங்கும்
கள்ளியாய்
அப்பெண்ணின்
அபலைச்சத்தம்!
ஆந்தைச்சந்துகளில்
முடக்கப்பட்ட
அகந்தைஇருளாய்...
ஆடைச்சரணங்கள்
அவிழ்க்கப்பட்ட
அந்தரங்கப்பொருளாய்...
ஆமைவிந்துகளின்
அர்ப்பப்பயணத்தால்
நிராயுதக்கீதங்களில்
அலறிக்கொண்டு
இருந்தது
அப்பெண்ணின்
அபலைச்சத்தம்!
வயோதிகச்சாற்றின்
சபலம்தீர்க்கும்
கறிக்கூடுகளாய்....
தனங்கள் காக்க
தனை மறந்து
காய்ந்துகிடக்கும்
சபலக்காடுகளாய்
கறுகிப்போனது
அப்பெண்ணின்
அபலைச்சத்தம!
மாதவிடாய்க்கிளிகள்
பனைமரப்பொந்தினை
அடைத்துவிட்டு
துரமாய்
நிற்க்கும்
வேளையிலும்
தாரமாய் அழைத்து
பேரமாய்க்
கழிந்துபோனது
அப்பெண்ணின் அபலைச்சத்தம்!
செத்துப்போ என்று
சொல்லாமல்
ஒருநாள்
பிழைத்துப்போ என்று
பெத்துவிட்டு
பிழையாய்க்கிடக்கிறது
பெண்ணகப்பேழையின்
அபலைச்சத்தம்!
நீரின்
சுனைக்குள் இறங்கியே
படுஆழம்
நீந்திக்கடந்தும்,
நிலத்தின் புதைகுழியில்
புதையுண்டு
நிர்கதியாய் யின்னும்
நிராயுதமாய்
போகுதே
அப்பெண்ணின்
அபலைச்சத்தம்!
ஓரரிரவு
சத்தமென்று
ஒவ்வொரு இரவும்
ஓய்வுப்பிணமாய்
ஒழிந்தொழிந்து
போகுதே
அப்பெண்ணின்
அபலைச்சத்தம!
அடுப்பாங்கரையில்
நொந்து விட்டு,
ஆத்தங்கரையில்
வெந்து விட,
ஞாதியென
விறகுகட்டை
தூக்கிக்கொண்டு,
ஞாதியத்து போகுதோ
ஞாலத்தைக்காக்க
ஞானப்பெண்ணியத்தின்
அபலைச்சத்தம!
வந்தேமாதரம்
என்னும்
வசைச்சொற்கள்
தாங்கிநிற்க்கும்
ஒருமுழக்கொடியிலா
அப்பெண்ணின்
அபலைச்சத்தம்
ஒலிக்கப்போகிறது?
ஒழியப்போகிறது?
நாத்திக்கூனரின்
மடியிலா
மடிந்துகிட்கிறது
ஆத்திகப்பெண்ணின்
அபலைக்குரல்?
ஆம் ஆம்
இன்னும்
ஏதோ ஒரு
மூலையில்
ஒலித்துக்கொண்டே
ஒடுக்கப்பட்டு
கிடக்குகிறது
பெண்ணியத்தின்
அபயக்குரல்!!!....
அவலக்குரல்!!!...
அழுகைக்குரல்!!!.....

எழுதியவர் : ருத்ரா (28-Oct-12, 11:28 am)
பார்வை : 244

மேலே