### அவளின் காதலன் யார் ? ###
அமைதியான இரவில்
அழகான வானில்
அகதியாய் திரியும்
அழகிய நிலவே
சுயநலமின்றி நீ சிரிக்க
சுற்றுப்புறமெங்கும்
சுடராய் ஒளிரும்
சுகமான ஒளியாய்
ஊமைக்காதலியே
உருகினேன் உன் அழகில்
உன்னருகே நானிருந்தால்
உதிரமின்றியும் உயிர் வாழ்வேன்
விலகி செல்லும் காதலியே
விரும்புகிறேன் நான் உன்னை
விட்டு வா நீ விண்ணை
விடமாட்டேன் நான் உன்னை
வெட்கப்பட்டு சிரிக்கிறாய்
வெட்டவெளியில் தவிக்கிறாய்
வேகத்தடைகள் ஏதுமில்லை
வெகு விரைவில் வந்து சேர் என் இதயத்துள்
எத்தனை காதலர்கள் உனக்காக
ஏங்கிகொண்டிருக்க
எவனுக்கு நீ சொந்தம்
எவன் இதயத்தில் உன் தஞ்சம்
பலரும் நிலவை காதலிக்க அவள் யாரை காதலிக்கிறாள்?