என் தங்கை....

படைத்தவன் மறதியால்...காத்தவன் பெயரில்
வாழும்....
சமுகத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் நாங்கள்....
உன் கருணையிலே கடவுளாய்...
உன் பிச்சைக்கு மனிதனாய்...
உன் இச்சைக்கு பெண்ணாய்...
உன் எச்சைக்கு ஆணாய்...
இதுபோல் பல அவதாரங்கள் உண்டு
அடையாளத்தை அழித்த எனக்கு....
திருநங்கையும் உன் தங்கையென கொள்....
உரைக்கிறேன் நான்...!!! உணர்வாயா நீ....???

எழுதியவர் : சிவபாரதி (29-Oct-12, 12:27 am)
சேர்த்தது : bharathiarya
பார்வை : 243

மேலே