காரேவின் கரிக்கோல் ஓவியங்கள் (கட்டுரைக்கவிதை)

அடோன்னா காரே-
மூன்று வயதிலிருந்து
முத்தாய்ப்பான ஓவியங்கள்
வரைந்தப் பெண் என்றால்
நம்ப முடியவில்லையா?
ஆனால் அதுதான் உண்மை!

பென்சில் அழிப்பான் கரிக்கோல்
அதுதான் அவரது ஆயுதங்கள்
ஓவியம் தீட்டும் தூரிகைகள்

கண்ணில் காணும்
விலங்குகள் மனிதர்கள்
அவர்களின் செயல்கள்
அதுவே ஓவியக்கருக்கள்

அவரது வரைபடங்கள்
திட்டமிடப்பட்டவைகள் அல்ல
நம் நிஜ உலகின் செயல்களை
நிதர்சனமாகச் சொல்லும்
அவர் அனுபவித்த அபத்தங்கள்

அவருடைய ஓவியங்கள்
குழந்தைகள் பெரியவர்கள்
கற்பனைகளை வளர்த்து
வேறு ஒரு உலகத்துக்கு
அழைத்துச் செல்லும் கவிதைகள்

அவருடைய ஓவியங்கள்
சாதாரண நிகழ்வுகளை
உயிரினங்களால் நடிக்க வைத்து
சொல்லப்படும் கதைகள்

ஆரம்பப் பள்ளியின்
ஆசிரியையான அவருக்கு
அவர் வரைந்த "யானைகள்" ஓவியம்
அளவற்ற செல்வத்தை
அள்ளித்தந்தது

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (29-Oct-12, 7:37 pm)
பார்வை : 94

மேலே