நன்றிகள்
நான் உயர்ந்தேன்
உலகம் என்னை உயர்த்தியதால் அல்ல
தாழ்த்தியதால்
நான் எழுந்தேன்
சிலர் என்னை தூக்கி விட்டதால் அல்ல
கீழே தள்ளியதால்
நான் வலுவானேன்
பலர் என்னுடன் சேர்ந்ததால் அல்ல
விலகியதால்
நான் அடைந்த பெருமைகள்
இவர்கள் என்னை கௌரவப்படுத்தியதால் அல்ல
ஏளனப்படுத்தியதால்
என் நன்றிகள்
என் எதிரிகளுக்கு .