இயற்கையிடம் அவளுக்காக !!

பூவே சொல் !
பூவே சொல் !
என் மனதில் உள்ள காதல் மொட்டுகளை
மலர வைக்க பிறந்தவள் எங்கு இருக்கிறாள் என்று சொல் !

மேகமே விலகிடு !
மேகமே விலகிடு !
என்னை அழகாய் மாற்றக்கூடிய அந்த நிலவு
என் கண்களோடு இனைய விலகிடு !

காற்றே நீ ஊமையா ?
காற்றே நீ ஊமையா ?
என் சுவாசத்தில் கலக்கபோகும் அந்த நேசமிக்கவளின்
வாசத்தை சொல்வாயா ? நீ ஊமையா?

வானமே வழிவிடு !
வானமே வழிவிடு !
என் உயிரில் இணையப்போகும் அந்த உயர்ந்தவளின் பெருமைகைளை கூற விண்மீன்கள்
வருகிறது !! வழிவிடு !

மழையே வாழ்த்திடு !
மழையே வாழ்த்திடு !
என் மேல் அன்பு மழை பொழிய போகும்
அந்த பேரழகோடு கைகோர்க்க வாழ்த்திடு !

காலமே விரைந்திடு !
காலமே விரைந்திடு !
என் காலத்தை மாற்ற போகும் அந்த
இனியவளின் மனதில் குடியரபோகிரேன்
காலமே விரைந்திடு !

எழுதியவர் : கோகுல் (30-Oct-12, 1:27 pm)
சேர்த்தது : K LAKSHMINARAYANAN
பார்வை : 92

மேலே