அன்னை இல்லம்

புதிதாய் இருந்தது
அழகழகான வண்ணங்கள்
அறை முழுவதும்
தீட்டப்பட்டிருந்தது..

தங்குவதற்கு ஏதுவாக
தனித்தனி அறைகள்

தரை முழுவதும்
வெள்ளை மார்பில்கள்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
பார்த்து பாரத்து
கட்டிய கட்டிடம்

அவன் அம்மாவிடம்
"அம்மா இந்த அறை பிடிச்சிருக்கா ?
பக்கத்து அறைக்கெல்லாம்
போகதம்மா அங்கெல்லாம்
இன்னும் ஒழுங்குப்படுத்தல
இந்த கட்டிடம் கட்டியவுடனே
தங்க போற முதல் ஆளு நீதாம்மா

இதுக்கு பேரே
'அன்னை இல்லம்'
தெரியுமா"

நான் போயிட்டு
அப்புறமா வாரேன்
என்று கிளம்பினான்

அவன் அம்மாவை
விட்டுவிட்டு வந்தது
முதியோர் இல்லத்தில்

எழுதியவர் : Rajasekaran (30-Oct-12, 1:06 pm)
சேர்த்தது : கவிரன்
Tanglish : annai illam
பார்வை : 113

மேலே