தொப்புள் கொடி உறவு

காதல்

பித்து பிடித்த,

ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,

எதுவும் செய்ய இயலாது
தான் இந்த பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
ஒரு கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்,
அகற்றி விட்டு,
தான்,
தொலைந்து விட வேண்டும்.
என்ற முனைப்புடன்,
ஏதோச்சியாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........

எழுதியவர் : த.நந்தகோபால் (dsn ) (31-Oct-12, 9:27 pm)
பார்வை : 1227

மேலே