"கணிணி வகுப்பில் ஒரு காதல் கதை"****(சி.பொற்கொடி-மேலூர்)

கருவில் சுமந்து ஈன்றெடுத்த தாயை
யார் என கேட்பேன் என் எதிரில்
நீ நின்றால் எனை மறந்து....!

மறுகையில் நீ வீதி உலா வந்தால்
திருவிழா திரள் போல
இளைஞர்களின் திரள் உன் பின்னால்....!
உன் அழகை கண்டு ரசிப்பதற்காக
அத் திரளில் நானும் ஒருவனாய்....!

மதிமயக்கும் உன் இரு விழிகளை கண்டால்
நிலவின் துலக்கம் குறைவுதான் பௌர்ணமியன்று
முழுமதியாய் உனை என் மனதில் எற்பதற்குள்
என் நிம்மதியை தொலைத்து
தெய்வங்களின் சன்னதியை நாடி நிற்கிறேன்
நீ எனை பார்க்க, காதல் செய்ய வேண்டுமென....!
நீ கண்ணகியாய் இருக்க வேண்டும்
என இறைவனை வேண்டுகிறேன்
எனக்கு மனைவி என்று வந்தால்
அது நீயாகத்தான் வேண்டும் ...!

ஒருதினம்.....
கருமைதானே அழகு என கேட்டாய்?
உன் இளமையது முன்னால்
கருமை ஒன்றும் குறையாக இல்லை ...!
பொறுமை நற்குணம் உனக்கிருக்க
பெருமையை தேடி தரும் உன் பெற்றோர்க்கு
வறுமையா கரணம் நீ வருத்தபடுவதற்கு
எதற்காக வாட்டம் கொள்கிறாய் ...?
உனை கண்டு நாட்டம் கொள்ள
ஆணில்லையா இவ்வுலகில் ...?
நீ விருப்பம் கொண்டால் நானிருக்கிறேன்
உனக்காக வருத்தம் கொள்ளாதே....!

அன்று முதல்.....
மோணத்தில் அடைத்த வியாழமாக
இருந்த என் எண்ணங்கள் உனை கண்டுவிடில்
நச்சுப் பாம்பாகி வெளிவருகிறது
காதல் விஷம் கொண்டு....!
நீ பாடம் எடுக்கும் சமயம்
உன் கரு விழிகளை கவனித்தால்
என் ஹார்மோன்கள் வடம் எடுத்து
ஆடுகின்றது என் இதயத்தில்....!

எனக்கொரு சந்தேகம் அன்பே...

நம் இரு இதயங்களுக்கிடையில்
சிறு இடைவெளி இருந்தும்
எப்படி பரிணாமம் செய்து கொண்டது
நாம் அறியாமலே நம் இதயங்கள்....?
கணிப்பொறி அருகில் இருந்தமையால்
காதல் வைரஸ் நம்மையும் (அல்ல)-
என்னை தாக்கி விட்டது போல...!

உயிர்பொறி கழங்கும் வேதனை
வகுப்பறை முடியும் தருணம் வந்தால்...!

பொரி கடலையில் பொட்டுக்கடலை
இல்லாமல் சுவை இல்லையோ
உன் நேற்றியத்தில் மேல்
மாலம் இல்லாமல் நீ அழகில்லை என்று
எட்டு நொடியாய் உனை திட்டி கொண்டிருப்பேன்
நீ ஏன் மாலமிடவில்லை என....!
நான் வைக்கும் வரை உன் நெற்றி
என் விரலுக்காக காத்திருக்கிறதோ என
கேள்வி எழுப்பியது எனக்குள் என் சிந்தனைகள்...!

உன்னாலே திருடனாநேனடி நீ அறிவாயா...?

நானும் ஒரு களவானிதான் ஒப்புக் கொள்கிறேன்
என்று உனை கண்டேனோ அன்றே
உன் இளம் மேனியதை
இரசித்து விட்டது என் இரு விழிகள்....!
ஆகையால் நானும் ஒரு களவானிதான்
ஒப்புகொள்கிறேன் தப்பு செய்து விட்டேன் என...!

உன் அழகை களவு செய்த என் விழிகளுக்கு
உன் பார்வையை களவு செய்ய தெரியவில்லையே
இரசித்தது நான் மட்டும்தானே ஆகையால்
காதல் எனும் தேசத்தில்
நான் மட்டுமே வசித்து கொண்டிருக்கிறேன்
என் காதல் தேசத்தில் நீ எப்போது?
குடியேற்றம் செய்யபோகிறாய்...?
என் வாழ்வில் தடுமாற்றம் தந்தது உன் இளிதானே
நீயே ஒரு வழி சொல்லடி காதலியே...!
என் விழி மீது பட்டுப்போகும்படி .....!

மழை துளிகளில் ஒரு துளி போல
என் விழிக்குள் வந்து நீ
தொட்டு செல் காதல் கதகளியாக ....!
இல்லையேல்,
மாழைத் திரளில் நீயும் ஒரு பெண்ணாக
வந்து செல் அது போதும்....!

ஆயுள் வரை உனை காண வேணாம்
அரை நொடி நேரமது அதுபோதும் ....!

பாயில் படுத்தால் படுக்கையில் கூட
நீ என் பக்கத்தில்தான் தலையணையாக ...!

வாயில் வார்த்தையாக வருவதெல்லாம்
அன்பே உன் பெயர்தானடி என் மோகினி...!

என் பெயர் முன்னால்
என் தந்தையின் பெயரை மறந்து
உன் பெயரின் முதல் எழுத்தையே
இணைத்து மகிழ்ந்தேன்...!
கலபம் விரித்தாடுவது போல
என் மனதிற்குள் விரித்தாடுகிறது உன் காதல்...!

என் அன்பே,
மழையில் நனைந்தால் சலதோஷம்
வருமென அறிந்தும் உனக்குப்
பிடிக்கும் என்பதற்காக நனைந்துவிட்டு
சுரம் வந்து பத்து நாட்கள்
முடங்கி படுத்திருக்கிறேன் போர்வையாக
உன் நியாபகங்களை என் மீது போர்த்திக்கொண்டு..!
மழையில் நனைந்தேன் சுரம் வந்தது
உன் மனதில் நனைந்து காதல் வரம்
பெறுவது எப்போதடி என் அன்பே...!

என் அன்பே நீ அறிவாயோ சில......

நான் நடத்தும் பாடம் புரிகிறதா என கேட்டாய்
நீ சிந்திய வார்த்தைகள் என் இதயத்திற்குள்
காதல் நாடகமே நடத்தியதை குழகு நீ அறிவாயோ?.

துயராக இருக்கிறதா நடத்தும் விதம் என கேட்டாய்
செங்களத்தில் துளக்கமில்லாதவன் கூட
அளத்தியே, உன் பார்வை களத்தில்
மயக்கம் கொள்வான் உன் விழிகளில்
வீழ்ந்து விடுவோமா என்று ....!
அத்தருணமே ஆம் என்றேன்
ஆம் என்றதிற்கு அர்த்தம்
அத்தருணம் துயராக்கவில்லை கால நேரங்கள்
என் இதயத்தை தால் பாடி
அழைத்தது உன் ஆசை மோகங்கள்
அப்பொழுதே எண்ணம் கொண்டேனடி
எத்தனைபேர் இனி என் வாழ்வில் வந்தாலும்
நீதானடி வாழ்நாள் மொத்தமும் என் காதலியாக...!
அந்த நேரம் பெண்ணே,
ஆவலிசத்தம் உன் செவியை நிரப்பவில்லையா?....
தூரலில் தூறலிடும் என் கண்ணீர் துளிதான்
எள்ளளவும் வருத்தம் தரவில்லையா?....

சில நிமிடம் கடந்து....

ஆக இவ்வளவு நேரமாக
எனை நீ வஞ்சித்தாயா என கேட்டாய்
என் மனதில் உன்னை வஞ்சிக்க வில்லை
நேசிக்க துவங்கி விட்டேன்
என்பதை செங்கலமே நீ அறிவாயோ?....

செத்துப்போ என சொன்னால்
சுவாசிப்பதையும் நிறுத்தும் அளவிற்கு
உன் மீது மோகம் கொண்ட
நிலமையைத்தான் மடந்தையே நீ அறிவாயோ?...

காதல் வேகம் உன் கண்ணில்
தெரிந்தும் அதை உணராமல்
நிலவை மேக மூட்டங்கள் மறைத்தது போல
நான் அறிந்தும் என் காதலை எனக்குள்ளே
புதைத்ததைதான் தல்லையே நீ அறிவாயோ?...

எல்லை மீறி சென்றால்
உன் கல்விக்கு தொல்லையளிக்கும்
என ஒதுங்கி சென்றேனே
வெல்லியே அதை நீ அறிவாயோ?...

இரு கல்லை எடுத்து
சன்னதி முன்னால் இட்டு கண்களைமூடி
ஒரு கல்லை எடுத்து அது நீயா ?
என அறிய ஆசை பட்டதைத்தான்
என் தோழியே நீ அறிவாயோ?...

ஒரு கல் நீ என்றும்
மறு கல் என் பெற்றோர்
பார்க்கும் பெண் என்றும் ...!
அதில் தோற்றுப்போனாலும்
உன் நினைவை மாற்றி கொள்ளாது
மீண்டும் மீண்டும் செய்து
கடவுளையே பொய்காரன் என்று
கடவுளை வதைத்ததைத்தான்
பேதையே நீ அறிவாயோ?...

முதலில் சந்தித்த நாள் அன்றே
முன் செம்மத்தில் வாழ்ந்த சிந்தனை
என் மனதிற்குள் மற்றும் குருதிக்குள் ...!

என் அருகில் வந்து அமர்ந்ததும்
முதல் உலகப்போர் துவங்கியது
என் இதயத்திற்குள் .....!
உன்னோடு பழகிய அந்த பதினைந்து நாட்களும்
பனிப்போராய் இருக்க குளிர் காய்ந்து
மகிழ்ந்த என் சந்தோஷத்தை
அரிவையே நீ அறிவாயோ?....

கூர்மையான வில் போன்ற உன் புருவமது
என் இதயத்தில் அம்பாக பாய்ந்து
இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டு
உன்னோடு காதல் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட என் இதயத்தைத்தான்
தனிகையே நீ அறிவாயோ?....

இமைகளை மூடி திறந்தால்
அந்த ஒரு நொடி கூட
பார்க்காமல் போவேனோ என
இமைகளை இமைக்காமல் உன்னை
இரசித்ததை சுவணமே நீ அறிவாயோ?...

இப்படி என் இதயத்தை வதைத்ததை அறியாமலே
எப்படி கேட்டாய் என்னை பார்த்து
எனை நீ வஞ்சித்தாயோ என்று...!
கொன்று போட்டாலும் நன்றி மறவாது
உன் பின்னால் வரும் என் காதல் ...!

பிறந்து துள்ளி எழுந்தோடும்
கன்று குட்டியாய் உணர்ந்தேன்
உன்னருகில் இருக்கும் வரை....!

உள்ளத்தில் சுமந்த உன்னை
கால வெள்ளத்தில் தொலைத்துவிட்டேனே...!
விலத்தில் விழுந்த தவளை கூட
தாவிப்பார்க்கும் கரை சேர
காதல் களத்தில் குதித்தும் விட்டேன்
மீள மனம் எனக்கில்லையே ...!
தண்ணீர் இல்லாமல் துள்ளும் மீனை போல
உன் கானல் இல்லாமல் துடிப்பதை
பிரவாளமே நீ உணர்வாயோ?...
பாற்கடலை கம்பு வைத்து
கலங்க வைக்கலாகுமோ ?
எச்சிலால் காரி துப்பினாலும்
கால் மிதியை கலட்டி அடித்தாலும்
உன் காதல் என் இதயத்தில் வசித்திருக்க
என் வாழ்க்கை இருட்டாகி
பயனிழந்து போகுமோ ....!
காலை தோன்றி முடிந்து
மாலை வந்து போகும்
மாலை தோன்றி விட்டு
காலை மறைந்த தினமிருக்கோ? அதுபோல
என் சோலை வணகிளியே
பூ மாழை மாற்றாமல்
என் உயிர் நீங்குவதுண்டோ?..
விரைவில் காதல் காசோலை கொண்டு வந்து
என் இதயத்தில் மெய் எழுதடி
என் கற்பனை காதல் உண்மையாகட்டும்...!

(சி. பொற்கொடி - அறியுர்பட்டி மேலூர் )

எழுதியவர் : (சி. பொற்கொடி - அறியுர்பட்ட (1-Nov-12, 5:44 pm)
சேர்த்தது : porkodi
பார்வை : 284

மேலே