விதவைத் தாய்

பாம்போடு குடித்தனம் பண்ணிடச் சொல்லுறான்
பேயோடு வீட்டிலே பசியோடு சாகிறேன்
நோயோடும் அவள் வயிற்றுப் பாம்போடும்
வலியோடு வாழ்கிறேன் மகனுக்காய் ;மருமகளோடு !

கண்ணிலே நெருப்புடனும் நாவிலே நஞ்சுடனும்
நெஞ்சிலே வஞ்சமும் நடனமிடும் வீட்டிலே
பரட்டைத் தலையும் கந்தல் புடவை உடுத்தி
வேலைக் காரியைப்போல் கேவலமாய் வாழ்கிறேன்

அப்பவே சொன்னாரு மகராஜன் : என் புருஷன்
கேட்க்காத பாவிக்கு தண்டனைகிடைச்சிடுச்சி
கூலி வேலை செஞ்சாவது நிம்மதியாய் வாழலாம்
துணை இல்லா சிறுக்கி எப்படி வாழ்ந்திடுவேன் ?

அவள் தான் அப்படி என்னைப் பாடாய் படுத்துறாளே
ஆறுதலை தேடி அவ புள்ளையப் பார்த்தா ;நஞ்சு
என்புள்ளயப் பார்த்தா ;அவன் அவளைப் பார்த்து பயந்து
பால் குடித்த நெஞ்சிலே வேல் கொண்டு குத்தறான்

எழுதியவர் : டாக்டர் குமார் (4-Nov-12, 4:57 pm)
பார்வை : 308

மேலே