!!!=( கற்பினியின் கண்ணீர்த்துளிகள் )=!!!!
![](https://eluthu.com/images/loading.gif)
மசக்கையில் உள்ளபோது
மாங்காய்கள் வேண்டுமென்றால்
மாந்தோப்பில் நான் புகுந்து
மாங்காய்கள் திருடி உண்பேன்...
சலித்திடாமல் உண்ணுகிறேன்
சாம்பல் மட்டும் போதுமென்று.
சங்கடங்கள் ஏதுமில்லை - என்
சந்திரனை சுமைக்கையிலே.
கையிரண்டும் இடுப்பில்வைத்து
காலடிகள் எடுத்துவைக்க
கண்ணீரோடு பட்ட பாடு
கடவுளுக்கும் தெரியாதே....!
ஒற்றைக்கதிரவன் உதிக்கும் முன்
ஓயாமல் உதைக்கிறான்...
ஓய்வின்றி புரள்கிறான்-என்
ஓவியமாய் திகழ்கிறான்..!
பத்து மாதம் பாதுகாத்து
பத்திரமா பெற்றெடுத்து
பாலகனின் முகம் கண்டு
பவளமாய் நான் மின்னுகிறேன்..!
அவனுக்கோர் பெயர்ச்சூட்ட
அழகான பெயர்த்தேடி
ஆங்காங்கே சேகரித்து
அழகான பெயர் வைத்தேன்.